Header Ads

  • BREAKING



    போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக இருங்கள்’: இயக்குனர் சமுத்திரக்கனி.

    ஜல்லிக்கட்டு போராட்டம் திசைதிரும்புவதாக கூறிய ஹிப்ஹாப் தமிழா ஆதியின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தொலைபேசி வாயிலாக புதியதலைமுறையைத் தொடர்பு கொண்டு பேசிய சமுத்திரக்கனி, ஆதியின் பேச்சு குழப்பத்தை விளைவிக்கும். போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக அவர் விலகி இருக்கலாம். தமிழகம் முழுவதும் கண்ணியமான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நாம் உறுதுணையாக தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad