Header Ads

  • BREAKING



    எச்1பி விசா கொள்கையால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி!

    அமெரிக்காவின் எச் 1பி விசா கொள்கையால் பல்லாயிரம் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமெரிக்காவை நம்பியுள்ள ஐடி நிறுவனங்களுக்கு புதிய விசா கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமெரிக்க அரசிடம் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறினார். வெளியுறவு அமைச்சகம் மூலம் தொடர்புகொண்டு இச்சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்துள்ள முன்னேற்றம் குறித்து பெருமைப்படுவதாக கூறிய ரவிசங்கர் பிரசாத், அதனை மதிக்கும்வகையில் அமெரிக்கா போன்ற நாடுகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad