10 ஆண்டுகளுக்கு முந்தைய பண பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரம்.
டெல்லி: வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை வெியிட்ட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தவறான மற்றும் காலதாமதமான கணக்கு தாக்கலை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய முறைகேடுகளை செய்வோர் மட்டுமின்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
அதே போல 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெரிய பணப்பரிமாற்றங்களை ஆய்வு செய்யும் வகையில் வருமான வரித்துறையினருக்கு புதிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வருமான வரி சட்டத்திருத்தத்தில் இதற்கான விதிமுறை இடம்பெற்றுள்ளது. அதன்படி வருமான வரி சோதனையில் 50 லட்சத்திற்கும் மேலான பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் கிடைத்தால், அது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இருந்தாலும் வருமான வரித்துறை ஆய்வு செய்யலாம். இதற்கு முன் 6 ஆண்டுகள் வரை உள்ள கணக்குகளை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். தற்போது இந்த வரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதால், வருமான வரித்துறை சோதனைகளுக்கு ஆளானவர்கள் பலர் மீதும் புதிதாக நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை