பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 100 பேர் பலி.
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட, தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் சேவன் பகுதியில் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அங்குள்ள லால் ஷாபஸ் மசூதியில், இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை