Header Ads

  • BREAKING



    மாணவரை தாக்கி கொலை செய்த வழக்கில் 12ஆம் வகுப்பு மாணவன் கைது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவனை தாக்கி கொலை செய்த வழக்கில், அரசுப் பள்ளி மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
    வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் திருவேங்கடம் என்ற மாணவர், சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3ஆம் தேதி அரசுப்பேருந்தில் பள்ளிக்குச் சென்ற அவர், பேருந்தை விட்டு இறங்கிய போது மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பால்ராஜ் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் படிக்கும் கடவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர், பேருந்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பேருந்தை விட்டு இறங்கும் போது திருவேங்கடத்தை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்தே திருவேங்கடம் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
    இந்த நிலையில், சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து அரசுப் பள்ளி மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad