15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்தேன்... ஓ.பன்னீர்செல்வம்.
15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்ததாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா முதலமைச்சராவதை ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனவும், சட்டமன்றத்தில் தனக்கு உள்ள பலத்தை நிரூபிப்பேன் எனவும் தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் துன்பப்பட்டு வந்ததாகவும், அப்போது தனது துன்பத்தை ஜெயலலிதா தீர்த்து வைத்தார் எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாளை தலைமைச் செயலகம் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை