பெரும்பான்மையை நிரூபிக்க பிப்.,18-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.
புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, பதினைந்து நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவகாசம் அளித்துள்ளார்.
இந்நிலையில், புதிய அரசு பெரும்பான்னையை நிரூபிப்பதற்காக நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது. காலை 11 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.
கருத்துகள் இல்லை