Header Ads

  • BREAKING



    193 செம்மரக் கட்டைகளுடன் லாரி பறிமுதல்: 8 பேர் கைது.

    திருப்பதி அருகே 193 செம்மரக் கட்டைகளுடன் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இதுகுறித்து ஆந்திர மாநில டிஐஜி காந்தா ராவ் கூறியதாவது: திருப்பதியில் உள்ள கிராண்ட் வேர்ல்ட் வாட்டர் தீம் பார்க் அருகில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 70 பேர் கொண்ட கும்பல் செம்மரக்கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தது. போலீஸாரை கண்டவுடன் அவர்கள் தப்பியோடி விட்டனர். பின் தொடர்ந்து சென்ற போலீஸார் அவர்களில் ஒரு நபரைப் பிடித்து கைது செய்தனர். மேலும் 193 செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த லாரி, நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
    விசாரணையில் கைது செய்யப்பட்டவர் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த காளி மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39) என்பது தெரிய வந்தது.
    இந்நிலையில் நரசிங்காபுரம் கிராமத்தில் பேருந்தில் ஏறிய செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரை பொது மக்கள் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad