Header Ads

  • BREAKING



    கூவத்தூரில், 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது சோதனை.

    சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடந்த 3 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. இதே போன்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து எம்.எல்.ஏக்களை விடுதியில் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் போலீசார் மற்றும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை ஆறே முக்கால் மணியளவில் கூவத்தூர் தனியார் ரிசார்ட்டுக்குமாமல்லபுரம் டி.எஸ்.பி. எர்வர்ட், வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் சென்றனர்.

    அதிகாரிகளுடன் ரிசார்ட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த சிலர் கல் வீசி தாக்கினர். மேலும் அங்கே நிற்க கூடாது என்றும் மிரட்டல் விடுத்தனர்.

    இதற்கிடையே ரிசார்ட்டிற்கு உள்ளே சென்ற அதிகாரிகள், அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசார்ட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதால், ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா 4 பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், எம்.எல்.ஏ.க்கள் அறையில் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதிமுக எம்.எல்.ஏ.க்களை 2 குழுவாக பிரித்து 2 இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் கூவத்தூரிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. கூவத்தூர் ரிசார்ட்டில் காவல்துறையினர் சுமார் 3 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad