ஐரோப்பா நாடுகளுக்கு 2017-ல் ஆயிரம் சரக்கு ரயில் சேவை!
ஐரோப்பா நாடுகளுக்கு இந்த ஆண்டில் ஆயிரம் சரக்கு ரயில்களை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.
போலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய ஐரோப்பா நாடுகளுக்கு சீனா சென்ற ஆண்டில் செங்டு ரயில் நிலையத்தில் இருந்து 460 சரக்கு ரயில்களை இயக்கியது. இதன் மூலம் 1.56 பில்லியன் டாலர் மதிப்பிலான 73 ஆயிரம் டன் சீனப் பொருட்கள் உலகம் முழுவதும் சென்றடைந்தன. இந்த ஆண்டில் ஐரோப்பா நாடுகளுக்கு இயக்கப்படும் சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. ஆயிரம் ரயில்களை இந்த ஆண்டில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன சர்வதேச ரயில் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் செங்டு ரயில் நிலையத்தில் இருந்து மேலும் பல நாடுகளை இணைக்க ரயில் பாதை அமைக்கும் திட்டமும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை