Header Ads

  • BREAKING



    கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.270 கோடி திரட்டுகிறது ரெப்கோ.

    கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.270 கோடியை திரட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் முடிவு செய்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    உலக வங்கியின் உறுப்பினரான ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச நிதி கழகத்துக்கு பாதுகாப்பான, மீட்கக்கூடிய, பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இதன் மூலம், ரூ.270 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 7 ஆண்டு முதிர்வு காலத்தைக் கொண்ட இக்கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் பின்னர் அறிவிக்கப்படும்.
    பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழு கூட்டத்தில் கடன்பத்திர வெளியீட்டுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad