Header Ads

  • BREAKING



    வாடிக்கையாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் 2-ம் இடத்தைப் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.

    செல்போன் நெட்வொர்க்கில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ட்ரூகாலர்ஸ் என்ற அமைப்பு ஆய்வு செய்த வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி,கடந்த செப்டம்பர் மாதம் சேவையைத் தொடங்கிய ஜியோ நிறுவனம், கடந்த 6 மாத காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் ஜியோ நிறுவனம் 23 சதவித அளவிற்கு வாடிக்கையாளர் சந்தையைப் ஆக்கிரமித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜியோ நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறுகிய காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இலக்கை ஒரே மாதத்தில் எட்டிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad