Header Ads

  • BREAKING



    1300 கோடி செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் 4வது ஏவுதளம்.

    நாட்டின் 4வது ராக்கெட் ஏவுதளத்தை ஆயித்து 300 கோடி செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    விண்வெளி ஆய்வில் இந்தியா சிறப்பாக முன்னேறி வருகிறது. மிகவும் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் தொழில்நுட்பத்தில் நாம் சிறந்து விளங்குகிறோம். ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரயோஜனிக் இன்ஜின் இந்திய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த இன்ஜின் வெற்றிகரமாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டதால் அடிக்கடி செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 
    பிற நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களும் இந்திய ராக்கெட்டுகளைக் கொண்டு விண்ணில் செலுத்தப்படும். இந்தியாவில் ராக்கெட் ஏவுதளங்கள் தும்பா மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளன. சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கே தும்பா ஏவுதளம் பயன்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. மொத்தம்3 ஏவுத ளங்கள் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் 4 வது ஏவுதளத்தை ஆயிரத்து 300 கோடி செலவில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விரைவில் மனிதனை சுமந்து செல்லும் விண்கலத்தை செலுத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்கான ராக்கெட் புதிய ஏவுதளத்திலிருந்து ஏவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
    புதிய ஏவுதளத்தில் ராக்கெட் ஒருங்கமைவு கட்டிடம், நடமாடும் அடிபீடம், நடுப்பகுதி கோபுரங்கள், அவசர வாயில்கள், தரை விடுபடு திசை வேகமுறை, விண்வெளி வீரர்கள் உள்ளே-வெளியே செல்லும் வாயில்கள், பாதுகாப்பு அறை, பொருள் கையாளும் கருவி, மின்முறைகள் ஆகியவை நிறுவப்படும். மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் மீண்டும் தரையிறங்குவதற்கான தளத்தை கோவாவுக்கு அருகேயுள்ள ஒரு இடம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகே உள்ள ஒரு இடத்தை இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad