தமிழகத்தில் ஏப்ரல் 30க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை, பள்ளித் தேர்வுகள் முடிந்த பிறகு, மே 15ம் தேதிக்குள் தான் நடத்த முடியும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
ஆனால், மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை