Header Ads

  • BREAKING



    ஆன்லைனில் கிளிக் மற்றும் லைக் செய்தால் பணம் என்ற பெயரில் ரூ.3,700 கோடி மோசடி!

    ஆன்லைனில் கிளிக் மற்றும் லைக் செய்தால் பணம் என்ற பெயரில் ஏராளமானோரை ஏமாற்றி 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சோஷியல்டிரேட் டாட் பிஸ் ((socialtrade.biz)) என்ற இணைய தளத்தில், 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டி உறுப்பினராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினரான பின்னர் இணைய தளம் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்தால், ஒவ்வொரு கிளிக்கிற்கும் 5 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி ஏமாந்து பணம் கட்டிய 6 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை சுருட்டப்பட்டுள்ளது. இணைய தளத்தின் பெயரை அவ்வப்போது மாற்றி நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அனுபவ் மிட்டல், ஸ்ரீதர் பிரசாத், மகேஷ் தயாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்ளேஷ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் ((Ablaze Info Solutions Pvt Ltd)) என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட இந்த 3 பேரிடமிருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள போலீஸார், வங்கிக் கணக்கிலிருந்த தொகை 500 கோடி ரூபாயையும் முடக்கியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad