Header Ads

  • BREAKING



    புதுவையில் மேலும் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்.

    புதுச்சேரியில் பன்றி காய்ச்சலால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவையில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இருப்பினும் பன்றிகள் நடமாட்டம் உள்ள முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 69 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதியுள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதுவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad