Header Ads

  • BREAKING



    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

    சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டவர், நில அளவர், வரையாளர் ஆகிய பதவிகளில் 5451 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதினார்கள். 

    இந்நிலையில், இத் தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு கிடையாது என்பதால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசுப் பணி உறுதியாகிவிடும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad