Header Ads

  • BREAKING



    5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்க நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் இருக்கை, பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விதிகளுக்குட்பட்டு இரட்டை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. காளைகளை நிறுத்தி வைக்க இடவசதி, குடிநீர், தீவனம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தி காட்சிகளை பதிவு செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad