தடை செய்யப்பட்ட ரூ.500,1000 வைத்திருந்தால் அபராதம்.
புதுடெல்லி: தடை செய்யப்பட்ட ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதிக்கு பின் யாரும் வைத்திருக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. 10க்கு அதிகமாக நோட்டுகள் வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. நேற்று மக்களவையில் இது தொடர்பான மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுகதா ராய், அருண்ஜெட்லி மக்களவை விதிகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய சுகதா ராய் எந்த முன்னறிவிப்பும் செய்யப்படாமல் பிரதமர் ரூபாய் நோட்டுக்கு தடை விதித்தது சட்டவிரோதம். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய அருண் ஜெட்லி ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு சில வழிமுறைகளை பின்பற்றி அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை