உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்துவதற்காக உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் 5 நீதிபதிகளின் பெயரை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 31 நீதிபதிகளுக்கான பணியிடங்களில் 8 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த வருடம் மேலும் 3 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். காலியாகவுள்ள பணியிடங்களால் உச்சநீதிமன்றத்தின் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரின் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஜே.எஸ்.வர்மா தலைமையிலான கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எம்.சந்தானகெளடர், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நவீன் சின்ஹா, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் குப்தா மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் அப்துல் நசீர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை