6 ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஹவாய் வி 9.
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பிரபலமான ஹவாய் நிறுவனம், ஹானர் வி 9 எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் வரும் 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
ஹவாய் ஹானர் வி 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
* 6ஜிபி ரேம் திறனுடன் வேகமாகச் செயல்படும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ஒரே நேரத்தில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்தும் டூயல் சிம் வசதி, 5.7 இன்ச் அளவு கொண்ட முழு எச்டி தரத்துடன் கூடிய தொடுதிரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
* இதன் நினைவுத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
* முன்புறம் 8 மெகாபிக்சல் மற்றும் பின்பக்க கேமரா 12 மெகாபிக்சல் உடன் வெளிவரவுள்ளது.
* அதிகரித்துள்ள இணைய பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் ஹவாய் வி 9 ஸ்மார்ட்போன் 3900 மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியுடன் வெளியாகிறது.
* கோல்ட், ரோஸ், சில்வர், ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த மாடல் மொபைல் 184 கிராம் எடையுடையது.
கருத்துகள் இல்லை