Header Ads

  • சற்று முன்



    சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அபாயம்: வெடிக்கிறது புதிய சர்ச்சை.

    கொச்சி: சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதியாகும் பல அபாயகரமான பொருட்களில், வாசனைப் பொருளான பட்டையைப் போன்றே இருக்கும் காசிஸாவும் அடக்கம்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவில் வாசனைப் பொருளாக மட்டும் அல்லாமல், ஆயுர்வேத மருந்துக்காகவும் பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், பட்டையைப் போன்றே இருக்கும் சீனாவில் காஸியா என்று அழைக்கப்படும் ஒரு வகை பொருள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இது மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான பொருளாக இருப்பதுதான் தற்போதைய அதிர்ச்சி தரும் தகவல்.

    இந்திய மாசாலா பொருட்களுக்கான வாரியம் கடந்த 2008ம் ஆண்டே காஸியா பற்றி அறிந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாத பொருட்களின் பட்டியலில் காஸியா இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், இன்று வரை அதிக அளவிலான காஸியா இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குக் கிடைத்த தகவலில், இந்தியாவில் கடந்த 2015 - 16ம் ஆண்டில் மட்டும் 19,405 டன் எடையுள்ள, (ரூ.242 கோடி மதிப்பு) காஸியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    ஆயுர்வேத மருந்துகளில் 70 சதவீதம் அளவுக்கு பட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை, எளிதாகக் கிடைக்கிறது, விலையும் மலிவு என்று மருந்துகளில் காஸியா பயன்படுத்தப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    மேலும், காஸியாவை உணவில் சேர்த்து சாப்பிடும் போது கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயமும் புற்றுநோயை விளைவிக்கும் அபாயமும் உள்ளது. இது இயற்கையாகவே விஷத் தன்மை கொண்டதாக உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அது உடலுக்கு விஷமாக மாறும் என்றும் தெரிய வந்துள்ளது.

    2008ம் ஆண்டே மாசலா பொருட்களுக்கான வாரியம், காஸியாவை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்து, கடந்த ஆண்டுதான் காஸியா, இறக்குமதி செய்யக் கூடாத பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த தடை, காஸியா இறக்குமதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad