Header Ads

  • BREAKING



    சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் பள்ளிப் பேருந்து தறிகெட்டு ஓடி விபத்து – இரு மாணவர்கள் நசுங்கி பலி.

    ஏற்காடு அடுத்த கொம்புதூக்கியில் மான்போர்டு சமுதாய மேல் நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது இந்த பள்ளிக்கு சேலத்தில் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியின் மினி பேருந்து மூலம் காலை அழைத்து செல்லப்படுவது வழக்கம். தினமும் ஒரு முறைக்கு 25 மாணவர்கள் வீதம் காலை மூன்று முறையும் மாலை மூன்று முறையும் அந்த மினி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பள்ளியில் நடந்த விழா முடிந்து சுமார் 80 மாணவர்களை ஒரே நேரத்தில் மினி பேருந்தில் ஏற்றிச்செல்ல பள்ளி நிர்வாகம் பணித்தது. மாணவர்கள் நெருக்கி அடித்து மினி பேருந்தில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர்.

    பேருந்து பள்ளியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரமாக நடந்து சென்ற இரு மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பேருந்து மலை பாதையின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் 25 க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் வெங்கடேஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவனும், மாணவை ஒருவரும் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகிறது.
    மாணவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காயம் அடைந்த பள்ளிக்குழந்தைகள் வாளவந்தி அரசு மருத்துவமனையிலும், சேலம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.

    பள்ளி பேருந்தில் இருந்து குதித்து தப்பிச்சென்ற ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
    பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனர் புதியவர் என்றும் அவர் இன்று தான் பணிக்கு சேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறது காவல்துறை. அளவுக்கதிகமான பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்றதே இந்த விபத்து நிகழ முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாரம் தாங்காமல் பள்ளி வாகனத்தில் பிரேக் பெயிலியர் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

    இந்த விபத்து முழுக்க, முழுக்க பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டும் அந்தபகுதி மக்கள், பள்ளி நிர்வாகிகளை கைது செய்து, மாணவர்கள் உயிரிழப்புக்கு இழப்பீட்டை பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்த பள்ளி வாகனத்தை ஆய்வு செய்து சான்று அளித்துள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்படி செய்தால் மட்டுமே பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு சம்பிரதாய சான்றுகள் வழங்குவதை தடுக்கமுடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad