தமிழக அரசியல் நிலவரம்: ஆளுநரால் காலதாமதம் செய்ய முடியாது: முன்னாள் அட்டார்னி ஜெனரல்.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசை நியமிக்கும் விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவெடுக்க வேண்டும்; நீண்டகாலத்துக்கு காலதாமதம் செய்ய முடியாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சொலி சொராப்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளரிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஒரு மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை ஏற்படும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அரசியல் நிலைமை வேறு மாதிரி உள்ளது.
மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைக் கோரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில், வரும் புதன் அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதை ஆளுநரால் காலதாமதம் செய்ய முடியாது என்றார் சொலி சொராப்ஜி.
கருத்துகள் இல்லை