Header Ads

  • BREAKING



    ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ. மீது மோசடி புகார்.

    முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ சரவணன் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகக் கூறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்தவர், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன். இவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஜெயராம் என்பவரிடம், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை சரவணன் திருப்பிக் கொடுக்காததால், நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவிடம் வழக்கறிஞர் மனு கொடுத்தார். ‌இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் ஜெயராம் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad