ஆளுநர் ஜனநாயகத்தை காப்பாற்றுவார்: சசிகலா.
ஆளுநர் ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அதிமுக-விற்கு தோல்வி என்பதே இல்லை என தெரிவித்தார். அரசை நிச்சயம் காப்பாற்றுவோம் எனவும் அவர் கூறினார்.
அனைவரின் ஒத்துழைப்புடன் அதிமுக மென்மேலும் வளரும் என்று கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் ஆளுநர் காப்பாற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை