Header Ads

  • BREAKING



    சென்னை அருகே மீனவ கிராமத்தில் தீ விபத்து.

    திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே ‌மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்‌கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின.

    காசிவிஸ்வநாதன் கோயில் குடியிருப்பில் நள்ளிரவில் இந்த விபத்து நேரிட்டது. இதனால் உறக்கத்திலிருந்தவர்கள், அவசர அவரமாக வெளியேறினர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மணலி, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்புப் படையினர் சமார் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad