ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை: ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
முன்னதாக தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்தார். பிறகு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது நெருப்பை கொண்டு யோக கலைஞர்கள் யோக வழியில் வழிபாடு நடத்தினர்.
பின்னணியில் மந்திர இசை முழங்கியது. பிரதமர் மோடியுடன் ஜக்கி வாசுதேவும் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படை, கியூ பிராஞ்ச் போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர், நக்சல், மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஷா யோகா மையம் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. கோவையில் நேற்றிரவு முதல் நகர், புறநகர் பகுதியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கருத்துகள் இல்லை