Header Ads

  • BREAKING



    அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விடுவிப்பு?

    சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். இவர் 1976ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானார். கடந்த 2012-ல் தமிழக அரசின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்விற்கு பிறகு 2014-ல் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் மார்ச் மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அவர் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad