தமிழக அரசில் உதவி புவியியலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள புவியியலாளர் மற்றும் உதவி புவியியலாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அறிக்கை எண்: 05/2017
விளம்பர எண்: 460
தேதி: 22.02.2017
மொத்த காலியிடங்கள்: 53
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி புவியியலாளர் (சுரங்கத் துறை) - 25
பணி: உதவி புவியியலாளர் (பொதுப்பணித் துறை) - 15
பணி: உதவிப் புவியியலாளர் (விவசாய பொறியியல் துறை) - 10
பணி: புவியியலாளர் (தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை) - 03
சம்பளம்:
மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100
தகுதி:
புவியமைப்பியல் துறையில் முதுகலை மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க கதகுதியானவர்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.5-50
தேர்வுக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2017
எழுத்துத் தேர்வு:
வரும் ஜூன் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில்நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, டி.என்.பி.எஸ்.சி நடத்தும் துறைத் தேர்வுகளுக்கும் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான தேர்வுகளும் மே மாதம் 24 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயதுவரம்பு, பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2017_05_not_eng_asst_geologist.pdf
என்ற அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிவந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை