Header Ads

  • BREAKING



    சட்டப்பேரவையில் யார் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு ?

    தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள்.

    ஜெயலலிதா மறைவால் ஒரு இடம் காலியாக இருக்கிறது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போதைய நிலையில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.

    தி.மு.க எம்.எல்.ஏக்கள் 88 பேர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கின்றனர்.

    தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கிறார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.

    கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண் குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

    230 எம்.எல்.ஏக்கள் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்

    தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போதைய நிலையில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.

    தற்போதைய சூழலில் 108 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.

    தற்போதைய சூலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட 6 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad