தீர்ப்புக்குப் பின் கூவத்தூரில் சசிகலா அவசர ஆலோசனை.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூவத்தூரில் 125 அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை அடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடையை சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிமுகவின் புதிய சட்டமன்ற குழு தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை