Header Ads

  • BREAKING



    புதிதாக ஏழு கிரகங்களைக் கண்டுபிடித்திருப்பதாக நாச விஞ்ஞானிகள் அறிவிப்பு..!

    விண்வெளி அறிவியல் ஆய்வில் முதன்முறையாக மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நாசா விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர். பூமியில் இருந்து 40 ஒளியாண்டுகள் தூரத்தில் சூரிய குடும்பத்திற்கும் அப்பால் கோல்டிலாக்ஸ் பகுதியில் ஒரு மினியேச்சர் நட்சத்திர மண்டலம் இருப்பதாகவும் அதில் பூமியின் பரப்பு கொண்ட 7 கிரகங்கள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிராப்பிஸ்ட் 1 என்ற ஜூபிடர் அளவிலான, பூமிக்கு அருகே உள்ள நட்சத்திரத்தை சுற்றி இந்த ஏழு கிரகங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மூன்று கிரகங்கள் கடல்கள் உள்பட நீர் ஆதாரம் இருப்பதாகவும் அதில் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஸ்பிட்சர் விண் ஆய்வு டெலஸ்கோப் மூலம் இந்த கிரகங்களை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடம் விளக்கினர். பூமிக்கு வெளியில் உயிரினங்கள், வேற்று கிரக வாசிகள் குறித்த கற்பனை உண்மையானதுதான் என்பதற்கான ஆதாரத்தை நெருங்கி விட்டதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad