Header Ads

  • BREAKING



    காவல்துறையினர் மிரட்டுகின்றனர்: எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்.

    காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதனையடுத்து, கூவத்தூர் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கியுள்ளதாக அங்குள்ள எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், ஒவ்வொரு எம்எல்ஏ-க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad