அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். வாடிவாசல் முன் கோயில் காளைகளுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. சிறந்த காளை, வீரர்களுக்கு ஆல்டோகார், டிராக்டர், 5 புல்லட், தங்கம் மற்றும் வெள்ளி காசு போன்றவை பரிசாக வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையொட்டி 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விழா குழுவினர் தனி கேலரி அமைத்து கொடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் பார்த்து வருகிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.
கருத்துகள் இல்லை