Header Ads

  • BREAKING



    கூவத்தூர் செல்கிறார் முதல்வர் பன்னீர்! பரபரப்பில் ரிசார்ட்.

    கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார்.

    சற்று நேரத்துக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த நல்லாட்சி தொடரும். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி' என்று பேசினார். இதனையடுத்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் செல்கிறார்.

    கூவத்தூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவுப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குதான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad