Header Ads

  • BREAKING



    மோசமான உணவு : புகார் தெரிவித்த பி.எஸ்.எஃப். வீரர் கைது என புகார்.

    எல்லைப் பாதுகாப்புப் படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் தெரிவித்த வீரர் தேஜ்பகதூர் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி கூறியுள்ள குற்றச்சாட்டை எல்லைப் பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. வேறு சிலரின் செல்போனை பயன்படுத்தி தேஜ்பகதூர் யாதவ் தன்னிடம் பேசியதாகத் தெரிவித்த அவரது மனைவி ஷர்மிளா பகதூர், தனது கணவர் அச்சுறுத்தப்படுத்தப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை, தேஜ்பகதூர் சுதந்திரமாக இருப்பதாகவும், அவரது மனைவியுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தேஜ்பகதூர் விருப்ப ஓய்வு கேட்டிருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டியிருப்பதால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad