Header Ads

  • BREAKING



    கேரளாவில் பாஜக சார்பில் இன்று ஸ்ட்ரைக்.

    கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.
    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூர்கடையில் தனியார் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் மீது எழுந்த புகார்களை அடுத்து, அவரை மாற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது கேரளா காவல்துறையினர் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து பாஜக சார்பில் கேரளா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதன் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதேபோல கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அரசுப் பேருந்துகளும் வரவில்லை. இதனால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு பயணம் செய்யும் பயணிகள் பேருந்து நிலையத்தில் பரிதவித்து நின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad