Header Ads

  • BREAKING



    வணிகரீதியில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்.

    வணிகரீதியான விளம்பர குறுஞ்செய்திகளை அனுப்பும் இயங்குதளத்தை உலகளவில் நடைமுறைப்படுத்தும் முன், இந்தியாவில் அறிமுகப்படுத்தி சோதிக்க வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தும் சிறுவியாபாரிகளைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டுவரும் இந்த இயங்குதளம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற செய்திகள் அனுப்பப்படமாட்டது எனவும் கூறியுள்ளது. 10 பேருக்குக் குறைவாக வேலை செய்யும் நிறுவனங்கள், பக்கத்துக் கடைகள், அருகில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்டோர் தங்களது வியாபாரம் குறித்த குறுஞ்செய்தி, போட்டோ, வீடியோ உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியும். உலகம் முழுவதிலும் இந்த வசதியை நடைமுறைக்குக் கொண்டுவரும் முன், முதலில் இந்தியாவை சோதனைக் களமாகக் கொண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் பிரையான் ஆக்டன் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad