Header Ads

  • BREAKING



    திமுக வின் ரகளையால் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

    கடும் ரகளை காரணமாக சட்டப்பேரவை கூட்டம் மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று காலை 11 மணியளவில் அவை கூடியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். கூட்டம் மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad