தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் தமிழ் மன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலர் ம.சு. சுதர்சன் தலைமை வகித்தார். பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
தமிழ் வழக்கு மொழிóச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
உலகத் தாய்மொழி நாளில் (பிப்.21) இதற்காக வழக்குரைஞர்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை