எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம்.
மத்திய அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் தில்லி அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றி வரும் ஹேமந்த் பார்கவா அந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அப்பதவியில், வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையில் நீடிப்பார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் உயர் நிர்வாகக் குழு, தலைவர் மற்றும் மூன்று நிர்வாக இயக்குநர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை