Header Ads

  • BREAKING



    காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை.

    சென்னைதமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது.

    இந்நிலையில், சமூக விரோதக் கும்பல் ஊடுறுவல் இருப்பதாகக் கூறப்பட்டது. சென்னையின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களிடம் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அசாதாரண சூழ்நிலையில் கூடுதல் கவனமாக இருப்பதற்காகவே ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சென்னை முழுவதும் இருக்கும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற ரீதியில் நேற்று முதலே காவல் துறை அதிகாரிகள் சென்னை முழுக்க இயங்கி வரும் பல்வேறு தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad