Header Ads

  • BREAKING



    சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ஜி ரமேஷ் பொறுப்பேற்பு!


    (சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.)

    சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.கே.கவுலுக்கு அடுத்த இடத்தில் இருந்த நீதிபதியான ஹுலுவாடி ஜி ரமேஷ் இன்று தற்காலிக தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1957-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்த ரமேஷ் 1993-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தமது நீதித்துறைப் பணிகளை தொடங்கினார். 2003-ம் ஆண்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர தலைமை நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் வரை, பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ரமேஷ் தொடர்வார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad