Header Ads

  • BREAKING



    காற்றையே எரிபொருளாகக் கொண்டு இயங்கும் டாடாவின் ஏர்பேட் கார்கள்.

    அழுத்தப்பட்ட காற்றினை எரிபொருளாகக் கொண்டு டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள ஏர்பேட் வகை கார்கள் வரும் 2020ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும் கார்கள் உருவாக்கம் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் நடந்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி கார்களே இதுவரை முன்னிறுத்தப்பட்டு வந்தன.

    இந்தநிலையில், அழுத்தப்பட்ட காற்றினை எரிசக்தியாகக் கொண்டு இயங்கும் காரினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோட்டார் டெவலப்மென்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏர்பேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்களின் முதற்கட்ட சோதனைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்தது. இதனால் ஏர்பேட் வகை கார்களை வரும் 2020ம் ஆண்டுவாக்கில் விற்பனைக்குக் கொண்டுவர டாடா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மணிக்கு 65 கி.மீ. என்ற அதிகபட்ச வேகத்தில் செல்லும் இந்த காரில், 200 கி.மீ. தூரம் பயணிக்கு ரூ.70 மட்டுமே செலவாகும் என்பது சிறப்பம்சம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad