Header Ads

  • BREAKING



    திருப்பதிக்கு அரசு கஜானாவில் இருந்து காணிக்கை: சந்திரசேகர ராவுக்கு வலுக்கிறது சர்ச்சை.

    ஹைதராபாத்: தனி தெலங்கானா கோரி தான் வைத்த வேண்டுதல் நிறைவேறியதால், அரசு கஜானாவில் இருந்து செலவிட்டு, ரூ.5.6 கோடி மதிப்புள்ள நகைகளை திருப்பதிக்கு காணிக்கையாக செலுத்தினார் சந்திரசேகர ராவ்.

    இன்று திருப்பதிக்கு தெலங்கான அமைச்சர்கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் வந்த முதல்வர் சந்திரசேகர ராவ், 19 கிலோ எடையுள்ள ரூ.5.6 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை காணிக்கையாக செலுத்தினார்.

    தனி தெலங்கானா மாநிலம் உருவானதற்கு நேர்த்திக்கடனாக இந்த காணிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

    மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், அதுவும் மாநிலம் உருவாகி சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் சந்திரசேகர ராவ் இந்த காணிக்கையை செலுத்தியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    அதோடு, முதல்வர் அலுவலகத்துக்கு 150 கோடி ஒதுக்கியதும், மிகப்பெரிய அரண்மனை போன்று வீடு கட்டி குடியேறியதும், தனது பிறந்த நாளை அரசு செலவில் வெகு விமரிசையாகக் கொண்டாடியதும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்களையும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad