சசிகலா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை.
சென்னை: தமிழகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்க ஆளுநரின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆதரவு எம்.எல்.ஏக்களை அதிகம் கொண்ட சசிகலா தரப்பில் இருந்து, நாள்தோறும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆளுநர் காலதாமதிப்பது கட்சி பிளவுபடுவதற்கு காரணமாக அமையும் என்று கூறினார். மேலும் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும் என்றும், பின்னர் செய்ய வேண்டியதை செய்வோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை போலீசார் உஷார் நிலைப்பட்டு தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் எங்கெல்லாம் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாமும் கூட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கருத்துகள் இல்லை