Header Ads

  • BREAKING



    செபி யின் புதிய தலைவராக அஜய் தியாகி நியமனம்.

    இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் (செபி) புதிய தலைவராக அஜய் தியாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    செபி அமைப்பின் புதிய தலைவராக அஜய் தியாகி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
    நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான அஜய் தியாகி ஹிமாச்சல் பிரதேசத்தில் 1984-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பதவியில் சேர்ந்தார்.
    தற்போது, செபியின் தலைவராக இருந்து வரும் யு.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் மார்ச் 1-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
    இதையடுத்து, அஜய் தியாகி அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad