Header Ads

  • BREAKING



    வானங்கள் நிறுத்தும் வசதியில்லாத உணவங்களை மூட மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    வாகனங்கள் நிறுத்தும் வசதியில்லாத உணவகங்களை மூடுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த லோகு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னை மாநகரில் ஏராளமான உணவகங்களில் (ஹோட்டல்) வாகனங்களை நிறுத்த இட வசதிகள் இல்லை. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்கள், பொது சாலையை மறித்து வெளியே நிறுத்தப்படுகின்றன.

    இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உயர்நீதிமன்றம் அருகே பூக்கடை, என்.எஸ்.சி. போஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை பார்வையிட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: உணவங்களை மூடுவது நோக்கம் அல்ல. ஆனால், போதுமான அளவு வாகனங்கள் நிறுத்தும் வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

    உணவகங்கள் முன்பு போதியளவில் வாகனங்கள் நிறுத்தும் இட வசதிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதே நேரத்தில் சற்று தொலைவில் உணவகத்துக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இருப்பின், அங்குச் சென்று வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தும் பணியாளர்களையாவது(வாலட் பார்க்கிங்) நியமித்து இருக்க வேண்டும்.

    மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில், உணவங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போதியளவில் வாகன நிறுத்துமிடம் அல்லது வாலட் பார்க்கிங்கை ஏற்படுத்தி தரவில்லை என்பதே காட்டுகிறது. ஆகையால், வாகனங்கள் நிறுத்தும் வசதியில்லாத உணவகங்களை உடனே மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 24-க்கு ஒத்தி வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad