முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் வர எதிர்ப்பு.
சென்னை: முதல்வர் பன்னீர் செல்வம் கூவத்தூர் வர ராஜ்யசபா எம்.பி., நவநீத கிருஷ்ணன் மற்றும் ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கூறுகையில், பன்னீர் செல்வம் கூவத்தூர் வந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். கவர்னர், டி.ஜி.பி., தலைமை செயலாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ., இன்பதுரை கூறுகையில், மத்திய அரசு சொல்வது போல் பன்னீர் செல்வம் செயல்படுகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்மதம் இல்லாமல் பன்னீர் கூவத்தூர் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை